நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்த பஞ்சம் கடற்கரை பகுதியில் வனத்துறை சார்பில் 110 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது.
கடற்கரை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் முட்டையிட்டு செல்வது வழக்கம். இதை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் இருக்கும் கடல் ஆமை முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சேகரித்து, மூட்டைகள் பொறிந்த உடன் கடலில் விட்டு வருவார்கள்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்த பஞ்சல் கடற்கரை பகுதியில் வனத்துறை சார்பில் பாதுகாப்பட்ட ஆமை முட்டைகளில் இருந்து பொறிந்த ஆமை குஞ்சுகளை நெல்லை மாவட்ட வன உயிரின காப்பாளர் முருகன், வனச்சரக அலுவலர் சரவணக்குமார், மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார்கள் இணைந்து 110 ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர்.
கோ. சிவசங்கரன்







