70 வயதில் ஜாக்கி சான்… புகைப்படம் இணையத்தில் வைரல்… கலங்கிய ரசிகர்கள்…

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. உலக சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே நமக்குப் பரிட்சயமானவர்களாக இருப்பார்கள். அந்த ஒரு சிலருள் முக்கியமானவர் ஜாக்கி சான். இவரின் சண்டைக் காட்சிகளைப்…

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே நமக்குப் பரிட்சயமானவர்களாக இருப்பார்கள். அந்த ஒரு சிலருள் முக்கியமானவர் ஜாக்கி சான். இவரின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து ரசித்து மகிழாதவர்கள் மிகவும் சொற்பம். அதில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் விதிவிலக்கல்ல. சண்டைக் காட்சிகள் மட்டுமல்லாமல் இவர் செய்யும் நகைச்சுவை சேட்டைகளுக்கு ரசிகர்கள் பலர் உலக அளவில் உள்ளனர் என்றே சொல்லலாம்.

ஹாலிவுட்டில் திறமையான பல நடிகர்களின் ஆதிக்கத்துக்கு நடுவே ஆசிய நாடான ஹாங்காங்கைச் சேர்ந்த ஒருவர் ஹாலிவுட்டில் கால் பதித்தவர்தான் ஜாக்கி சான். கடந்த 1954 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் உள்ள விக்டோரியா பீக் என்கின்ற இடத்தில் பிறந்தவர் ஜாக்கி சான். இவர் தற்காப்புக் கலைகளில் ஒன்றான குங்ஃபூவை தன் சிறு வயதிலேயே பழகியிருந்தார்.

ப்ரூஸ் லீ, ஜெட் லீ போன்ற ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனித்துத் தெரிய குங்ஃபூ என்ற கலையை வேறுவிதமாகப் பயன்படுத்தியவர் ஜாக்கி. முதலில் பிரபல நடிகர் புரூஸ்லீ அவர்களுடைய ஸ்டண்ட் கலைஞராக திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு மெல்ல மெல்ல ஹாலிவுட் உலகில் இவருடைய திரைப்படங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். 

ஜாக்கி சானுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு இவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற விருதுகளை அவருடைய சினிமா பயணத்தில் அவர் பெற்றிருந்தாலும் அவர் பெற்ற ஆஸ்கர் விருது தனக்கு மறக்க முடியாத ஒன்று என்று அவர் பல மேடைகளில் கூறியிருக்கிறார். 1962 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஜாக்கி சான்.

https://twitter.com/Pastor1211/status/1768660333067915338

இந்த 2024 ஆம் ஆண்டில் நான்குக்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 70 வயதை தொட்டுவிட்ட ஜாக்கிசானின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நரைத்த தலையுடன் காணப்படும் ஜாக்கிசானை பார்த்து, “இவருக்கும் வயதாகுமோ” என்கின்ற ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.