ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் – மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி!

நேற்று இரவு அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றிய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர். டெல்லியில் பிப் 15ம் தேதி 50 கிலோ போதைப்பொருள் கடத்திய…

நேற்று இரவு அவரது வீட்டை உடைத்து ஆவணங்களை கைப்பற்றிய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரது வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.

டெல்லியில் பிப் 15ம் தேதி 50 கிலோ போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில், தமிழ்நாட்டை சேர்ந்த முகேஷ், ரகுமான், அசோக் குமார் ஆகியோர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடந்த விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் இதற்கு மூளையாக செயல்பட்டு வருவதும் உறுதியானது. 3 ஆண்டுகளில் ரூ.2000 கோடி மதிப்பில் போதைப்பொருள் விற்பனை செய்ததும் உறுதியானது.

இதனையடுத்து, அதிகரிகள் ஜாபரை தேடியபோது அவர் தலைமறைவாகியதால், நேற்று மதியம் 12 மணிமுதல் அவரது வீட்டில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

மயிலாப்பூர் சாந்தோம் பகுதியில் இருக்கும் ஜாபரின் வீட்டில் சோதனை நடந்தது. அவரது சகோதரர்கள் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவரும் நிலையில், வீட்டிற்கு சீலும் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.