இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர்-அண்ணாமலை

இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர் மோடி என்று விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டின் இறுதி நாளில் பாஜக மாநில…

இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தவர் பிரதமர் மோடி என்று விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். 

தமிழ்நாடு விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டின் இறுதி நாளில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். 75வது சுதந்திர தின அமிர்த திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய மூன்று தினங்களுக்கு வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. விவசாயத்திற்காக, விவசாயிகளுக்காக பிரதமர் மோடி செயல்படுத்திய திட்டங்களை பட்டியல் போடலாம். இந்த திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அளவில் 2 கோடி பேர் பயன் அடைந்து உள்ளனர். விவசாயிகள் பயனாளர் திட்டம் அந்த அளவுக்கு தமிழகத்தில் பரவி உள்ளது. இன்று விவசாயம் செய்தால் நஷ்டம் தான் வரும். நானும் விவசாயம் செய்து வருகிறேன். ஆனால் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஒரு மாதம் கூட லாபம் வரவில்லை. ஆனாலும் விவசாயத்தை விட கூடாது என்று முடிவில் உள்ளோம் என்றார்.

விவசாயம் செய்தால் பிழைக்க முடியாது என்று உள்ள நிலையில் இந்த 8 ஆண்டுகளில் விவசாயம் செய்தால் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நிலையை கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. பெங்களூருவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. முதன் முறையாக இந்தியாவில் விவசாயம் செய்யலாம் என்று நம்பிக்கையை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி.

விவசாய பொருட்கள் விற்க நான் இருக்கிறேன் என்று நம்பிக்கை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. விவசாய சட்டத்தை புரியாமலே தமிழக அரசியல் வாதிகள் எதிர்தத்தனர். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2040 ரூபாய், தற்போது 56 சதவீதம் உயர்த்தப்பட்டது. கிஸான் கிரடிட் கார்டு திட்டம் மூலம் சுமார் 84 லட்சம் பேர் பயன் அடைந்து உள்ளனர் என்றார்.

விவசாயிகள் பயன் அடைய வேண்டும் என்று மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குகிறோம். இதன் மூலம் தமிழக அளவில் 46 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். வெற்று விளம்பரங்கள் செய்து பாஜக வளர விரும்பவில்லை. அவினாசி அத்திக் கடவு திட்டம் 15 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 96 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. ஆனால் திமுக அரசு கிடப்பில் போட்டு உள்ளது என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஈரோடு என்றால் மஞ்சள் உற்பத்தி அதிகம், கோவை என்றால் தேங்காய் உற்பத்தி இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும் எது சிறப்பாக விளையுமோ அதை முன்னிறுத்தும் வகையில் திட்டங்களை மோடி செயல்படுத்தி வருகிறார். இந்தியா தற்போது பெருங்காயம் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து உள்ளது என்றார்.

இந்த விவசாயிகள் மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு வாயே திறக்கவில்லை. நம்மாழ்வார்க்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்று பாஜக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இயற்கை வேளாண்மை குறித்து படிக்க வேண்டும். அவரின் வேளாண்மை முறைமைகளை நாம் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டின் 28 தீர்மானங்களையும் பாஜக ஏற்றுக் கொள்கிறது. இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து பிரதமர் மோடி கவனத்திற்கு கொண்டு செல்வோம். மோடி ‘ உள்ளூரை நோக்கி படையெடுத்து செல் ‘ என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். இந்திய கிராமங்களில் 5 ஜி மற்றும் 6 ஜி வசதிகள் வரவுள்ளது. இதனால் நகர் புற மக்கள் கிராமங்கள் நோக்கி செல்வார்கள். எனவே கிராமங்கள் வளரும். பாஜகவின் மூன்றாவது ஆட்சியில் இது சாத்தியம் ஆகும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.