முக்கியச் செய்திகள் செய்திகள் விளையாட்டு

ஹர்மன் பிரீத்தின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது – பாராட்டிய பார்த்தீவ் படேல்

மகளிர் பிரிமியர் லீக்கிற்கு நல்ல தொடக்கம் தேவை, மும்பை இந்தியன்ஸ் அதைச் சரியாகச் செய்தது என்று இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை நடைபெற்ற மகளிர் பிரிமியர் லீக் போட்டித் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலில் பேட்டிங் செய்த கவுரின் திறமையுடன்  65 ரன்கள் எடுத்து  மும்பை இந்தியன்ஸ் அணியை 207 ரன்களுக்கு கொண்டு சென்றது. பின் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வெறும் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்தப் போட்டி தொடர்பாக பார்த்திவ் படேல் கூறியதாவது: இது போட்டிக்கு தேவையான நல்ல தொடக்கம். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் இன்னும் பல அதிரடி ஆட்டத்தை காண அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். டாஸ் இழந்த பிறகும் மும்பை இந்தியன்ஸ் அணி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தொடக்க ஆட்டத்தை குறிப்பாக பவர்பிளேயின் போது சிறப்பாக விளையாடினார்.

பெண்கள் கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய மேடை என்பதால் வீரர்கள் உட்பட அனைவரும் ஆவலுடன் காத்திருந்து அனைவரும் பதற்ற நிலைக்கு சென்றனர். ஆனால் சற்றும் எதிர்பாரா விதமாக மும்பை இந்தியன்ஸ் மிகச் சிறப்பாக விறுவிறுப்பான தொடக்கத்தை ஆரம்பித்தது. மேலும், வரும் நாட்களில் இன்னும் சுவாரஸ்யமான ஆட்டங்கள் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

அண்மைச் செய்தி : தமிழ்நாட்டில் 10ம் தேதி 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ஹர்மன் பிரீத்தின் கேப்டன்சி சிறப்பாக இருந்தது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, அவரது ஆட்டத்தின் வியூகம் சிறப்பாக இருந்தன. மிக முக்கியமாக, குஜராத் ஜெயண்ட்ஸ் ஒரு கட்டத்தில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தோன்றியபோது, ​​​​அவர் தனது அனைத்து வீரர்களையும் நேர்த்தியாக விளையாட செய்து அணி வெற்றி பெற உதவினார். முக்கியமாக அவர் எப்போதுமே தனது பவர் ஹிட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். இவ்வாறு பார்த்தீவ் படேல் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொத்து குவிப்பு வழக்கு – திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சம்மன்

EZHILARASAN D

அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை; மத்திய அரசு தகவல்!

Dhamotharan

’பாட்ஷாவின் வெற்றியை பாட்ஷா 2 கொடுக்குமா என்பது ரஜினிக்கே கேள்வியாக இருந்தது’

Arivazhagan Chinnasamy