இந்த பழக்கத்தினால் தான் என் அப்பாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டது என ரோபோ சங்கரின் மகள் தெரிவித்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரைப் பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் படிப்படியாக சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரை தனது தனித்துவமிக்க நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர் இரும்புத்திரை, கோப்ரா மற்றும் ப்ளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் பிரபலமாக அறியப்படும் காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ரோபோ சங்கர் இருந்து வருகிறார்.
ரோபோ சங்கர் மட்டுமல்லாமல் அவரது மகளான இந்திரஜா சங்கரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய்யின் நடிப்பில் வெளியான பிகிலு படத்தில் கால்பந்து வீராங்கனையான நடித்து சினிமா ரசிகர்களால் கவனித்தக்க நடிப்பை வெளிப்படுத்தினார்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரோபோ சங்கரின் ஒல்லியான படங்கள் இணையத்தில் வெளியாகின. அதில் ரோபோ சங்கருக்கு உடல் நிலை மோசமாகி விட்டதாக பலர் பொய்யான தகவல்களை வெளியிட்டு வந்தனர். இது குறித்து ரோபோ சங்கருடைய மனைவி பிரியங்கா தன்னுடைய கணவருக்கு உடல்நலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்திருந்தார்.
ஜூன் 26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடலோர காவல்படை சார்பில், சென்னை மெரினா கடற்கரையில் போதையில்லா தமிழ்நாடு விழுப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா பேசியதாவது.. :
என்னுடைய அப்பா ரோபோ சங்கர் கடந்த சில மாதங்களாக மது பழகத்திற்கு மிகவும் அடிமையாகி இருந்தார். அந்த பழக்கத்தில் இருந்து தற்போது தான் வெளி வந்துள்ளார். தற்போது அந்த பழக்கத்தில் இருந்து வெளி வந்து புதிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மது பழக்கம் அதிகமாக இருந்ததால் உடல் நலம் குறைபாடு என் அப்பாவிற்கு ஏற்பட்டது. மாற்றம் ஒன்று தான் மாறாதது. அடுத்த தலைமுறை நாம் தான் இது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.” என இந்திரஜா தெரிவித்துள்ளார்.







