இத்தாலியில் வீடு வாங்கி வாடகைக்கு விடும் பிரபல நடிகர் – யார் தெரியுமா..?

இத்தாலியில் பிரபல பாகுபலி நடிகரான பிரபாஸ் வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி வாடகை விட்டுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா…

இத்தாலியில் பிரபல பாகுபலி நடிகரான பிரபாஸ் வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி வாடகை விட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா நடிகராக பிரபலமானார். பாகுபலியில் இவர் நடிப்பு சினிமா ரசிகர்களால் பெரிதளவில் பாராட்டப்பட்டது.

இதனையடுத்து நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாக வெளியாகியது. ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக வைத்து  இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். ரூ.500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் வெளியான ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.140 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்பட்டது. வெளியான முதல் 5 நாட்களில் ரூ.400 கோடி வசூலை பெற்றதாக சொல்லப்பட்டாலும் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் நல்ல வசூலை கொடுத்தாலும் அடுத்தடுத்த நாட்களில் படம் நஷ்டத்தை சந்தித்ததாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் இத்தாலியில் ஒரு வில்லா ஒன்றை வாங்கி  அதனை வாடகைக்கு விட்டுள்ளார். சினிமாவில் கோடிகளில் பணம் சம்பாதிக்கும் பிரபாஸ் வெளிநாடுகளை சொத்துக்களை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வில்லா மூலம் மாத வருமானமாக 40லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.