மத்திய கிழக்கு நாடான சிரியாவில் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.இந்த நிலையில் சிரியாவின் அரசுப் படைகளுக்கும், ட்ரூஸ் இனக் குழுக்களுக்கும் இடையில் கடுமையான மோதல்கள் தொடங்கியுள்ளது.
இதில், ட்ரூஸ் படைகளுக்கு ஆதரவான நிலையெடுத்துள்ள இஸ்ரேல், சிரியா மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் தெற்கே உள்ள கிஸ்வா நகர் மீது இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சிரிய இராணுவத்தின் 44வது பிரிவின் இராணுவக் கட்டிடங்களில் ஒன்றை குறி வைத்து தொடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.







