இஸ்ரேல் நாட்டில் பாதிப்பேருக்கு தடுப்பூசி செலுத்துப்பட்ட நிலையில், பொதுவெளிகளில் மக்கள் முகக்கவசம் அணிய இனி தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் கடந்த 2020ஆம் ஆண்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு மிக தீவிரமாக இருந்த காலத்தில் 8,36,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் 6,331 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கொரோனா இரண்டாவது அலை மற்றும் மூன்றாவது அலையின் பாதிப்பை அந்நாடு சந்தித்தது.
அதன் எதிரொலியாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு. மக்கள் தொகை 90 லட்சத்துக்கும் அதிகம் உள்ள இஸ்ரேலில், 53 சதவிகிதம் பேருக்கு ஃபைஸர் மற்றும் பயோ என் டெக் ஆகிய தடுப்பூசிகள் வெற்றிகரமாக போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி, கல்லூரிகள், திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுவெளிகளில் வரும் மக்கள் முகக்கவசம் அணியதேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருங்கி இருக்கும் அறைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது.
அந்நாடில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று, புதிதாக 84 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 206 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவகின்றனர்.







