மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது முறையாக களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஏற்கெனவே இரண்டு போட்டிகளில் பங்கேற்றிருந்த சென்னை அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றிருந்தது. முன்னதாக நடைபெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கிடையே 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது அனைவருக்கும் சென்னை ரசிகர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில் இன்று ராஜஸ்தானுக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியானது பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆட்டத்தில் வெற்றிக்கு முக்கியமான வீரராக இருந்த மொயீன் அலி இந்த ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்க்ஸ் 4வது இடத்திலும், பஞ்சாப் கிங்ஸ் 7வது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.







