ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இஷான் கிஷான் மற்றும் விராட் கோலி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி நடந்து காட்டி கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 51 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்துள்ள இலங்கை அணி 50 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் 6 விக்கெட்டுகளையும். ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் ஓபனிங்கில் இஷான் கிஷனும், சுப்மன் கில்லும் களத்தில் இறங்கினர். 4 ஓவர்களின் முடிவில் கிஷன் 14 ரன்களும், கில் 19 ரன்களும் எடுத்திருந்தனர். 276 பந்துகளில் 17 ரன்களே இலக்காக இருந்தது. 5 ஓவர்கள் முடிவில் கிஷன் 21 ரன்களும், கில் 23 ரன்களும் எடுத்து மொத்தம் 45 ரன்கள் குவித்திருந்தனர்.
பின்னர் தொடங்கிய 5வது ஓவரில் 5 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து 6வது ஓவரின் முதல் பந்தில் இந்திய அணி தனது இலக்கை எட்டியது. 10விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டிகள் மிகவும் சுலபமாக இந்திய அணி கைபற்றியது. இதன்மூலம் இந்திய அணி 8வது முறையாக ஆசியகோப்பையை கைப்பற்றியது.
இதன் மூலம் 8-ஆவது முறையாக கோப்பை வென்று, போட்டியின் வரலாற்றில் அதிகமுறை சாம்பியன் ஆன அணியாக நீடிக்கிறது. இதற்கு முன் 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய எடிஷன்களில் இந்தியா கோப்பை வென்றுள்ளது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் அசத்தலாக பௌலிங் செய்து 6 விக்கெட்டுகள் சாய்த்து ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
Virat Kohli – What a character.
Ishan walking like Kohli and then Kohli did Kohli things – The unity in the team is something else. https://t.co/W7sLnPrKgd
— Johns. (@CricCrazyJohns) September 17, 2023
இந்நிலையில், போட்டிக்கு பிறகு விராட் கோலி மற்றும் இஷான் கிஷான் இருவரும் ஒருவரையொருவர் ஒருவர் போன்று ஒருவர் நடந்து காட்டி மாறி மாறி கலாய்த்துக் கொண்டனர். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.அடுத்து இந்திய அணி ஆஸி. அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதற்கடுத்து நேரையாக உலகக் கோப்பை விளையாட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.







