நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த நிதீஷ் குமார் கூறியதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”மக்களவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக நான் கூறி வருகிறேன். தேர்தலுக்கு இந்தியா கூட்டணி எப்பொழுதும் தயாராக இருக்கிறது. முன்கூட்டியே தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம். தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.
பீகாரில் பல வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்போது உடனிருந்த பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், வரும் தேர்தலில் நாங்கள் ஒற்றுமையுடன் போராடுவோம் என்று கூறினார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி வைத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.