மாநிலத்தின் கருத்தை கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. ஆனால், தற்போது உயர்த்தப்பட்ட விலையில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள் இதுதான் கூட்டாட்சியா என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் அப்போது தெரிவித்தார்.
”இதுதான் கூட்டாட்சியா?” – அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்https://t.co/WciCN2SQmv | #PetrolDieselPriceCut | #Petrol | @ptrmadurai | @BJP4India | #News7Tamil pic.twitter.com/pWH7l2qtd4
— News7 Tamil (@news7tamil) May 22, 2022
அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்த அவர், ஆண்டுக்கு 12 சிலிண்டருக்கு இந்த மானியம் வழங்கப்படும் என்றும் இந்த விலை குறைப்பால் Pradhan Mantri Ujjwala Yojana திட்டத்தின்கீழ் 9 கோடி மக்கள் பயனடைவர் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, இன்று பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் 102.58 ரூபாய்க்கு 1 லிட்டர் பெட்ரோல் விறபனை செய்யப்படுகிறது. அதேபோல, 94.19 ரூபாய்க்கு 1 லிட்டர் டீசல் விறபனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசால் கடுமையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு செவிசாய்த்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, மத்திய அரசு ஒருபோதும் எந்த மாநிலங்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், மாநிலங்கள் தங்கள் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
🤔The Union Government didn't INFORM, let alone ASK for ANY state's view when they INCREASED Union taxes on Petrol ~23 Rs/ltr (+250%) & Diesel ~29 Rs/ltr (+900%) from 2014
Now, after rolling back ~50% of their INCREASES, they're EXHORTING States to cut
Is this Federalism ? https://t.co/moYsfqHtdL
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) May 21, 2022
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







