ஆன்லைன் ஆட்டோ செயலி கொடுத்த அசத்தல் அப்டேட்! ருசீகர அனுபவத்தை பகிர்ந்த பயணி!

நம்ம யாத்ரி எனும் ஆன்லைன் ஆட்டோ செயலி தன்னை மிகவும் கவர்ந்ததாக பெண் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவில் ஆன்லைன் ஆட்டோ செயலி மக்களிடத்தில் முக்கிய…

நம்ம யாத்ரி எனும் ஆன்லைன் ஆட்டோ செயலி தன்னை மிகவும் கவர்ந்ததாக பெண் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் ஆன்லைன் ஆட்டோ செயலி மக்களிடத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஓலா, உபேருக்கு போட்டியாக பெங்களூரில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆட்டோ செயலி நம்ம யாத்ரி. இந்த செயலி தற்போது சென்னையிலும் தொடங்கப்பட்டது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நம்ம யாத்ரி மக்களிடையே தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், பெங்களூரில் பெண் ஒருவர் நம்ம யாத்ரியில் ஆட்டோ முன்பதிவு செய்துள்ளார். அந்த பெண்ணின் புக்கிங் உறுதி செய்யப்பட்டதும் அதற்கான மெசேஜ் வந்துள்ளது. தொடர்ந்து,  “டிரைவரின் பிறந்தநாள்! உங்கள் ஓட்டுநர் பிரசன்ன குமாரின்  பிறந்தநாள் இன்று. உங்களுடைய வாழ்த்து அவரது நாளை மேலும் சிறப்பிக்கும்” எனவும் ஒரு மெசேஜ் வந்துள்ளது. இதனை பார்த்ததும் நேஹல் ஆச்சரியமடைந்தார்.

https://twitter.com/NehalMisra/status/1758400254540661046

இதனை தனது எக்ஸ் தளத்திலும் பகிர்ந்து, நம்ம யாத்ரியில் இதுபோல ஒரு அம்சம் இருப்பது எனக்கு தெரியாது எனவும், இது மிகவும் அழகானது எனவும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், அற்புதம் என்றும் மற்றொருவர் இதுபோன்ற அம்சங்கள் நல்ல வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.