‘தர்பங்கா – டெல்லி சாலையில் பயங்கர விபத்து’ என சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ உண்மையா?

This news Fact Checked by ‘Vishvas News’ தர்பங்காவிலிருந்து டெல்லி செல்லும் NH-57 சாலையில் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து என சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி…

Is the video going viral on social media saying 'Terrible accident on Darbhanga - Delhi road' true?

This news Fact Checked by ‘Vishvas News

தர்பங்காவிலிருந்து டெல்லி செல்லும் NH-57 சாலையில் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி பயங்கர விபத்து என சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பு குறித்து காணலாம்.

பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதுவதைக் காணக்கூடிய ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை சமீபத்தியது என பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ NH-57 தர்பங்கா டெல்லி நடைபெற்றது என கூறப்படுகிறது.

இதுகுறித்த உண்மை சரிபார்ப்பில், இந்த வீடியோ 2017-ம் ஆண்டு, பனிமூட்டம் காரணமாக யமுனா விரைவு சாலையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான போது எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது. அதே வீடியோ தற்போது சமீபத்தியது என்ற தவறான கூற்றுடன் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவுக்கும் தற்போதைய சூழ்நிலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக் பயனர் சந்தன் குமார் பாஸ்வான் நவம்பர் 17 அன்று இந்த வீடியோவைப் பகிர்ந்து, “குளிர்காலத்தில், NH-57 தர்பங்கா டெல்லி மோர் அருகே ஒரு வேதனையான விபத்து நடந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

பதிவின் காப்பக இணைப்பை இங்கே பார்க்கவும்.

உண்மை சரிபார்ப்பு:

வைரலான பதிவின் உண்மையை அறிய, இன்விட் கருவியின் உதவியுடன் வீடியோவின் பல கீஃப்ரேம்களை பிரித்தெடுத்து, கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடப்பட்டது. அதன்மூலம், இந்தியா டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று கண்டறியப்பட்டது. நவம்பர் 8, 2017 அன்று பதிவேற்றப்பட்ட அந்த வீடியோவில், இது யமுனா விரைவுச் சாலையில் நடந்த விபத்து என்று விவரிக்கப்பட்டுள்ளது.

மேலும், நியூஸ் 24ன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் 8 நவம்பர் 2017 அன்று வைரலான வீடியோ தொடர்பான அறிக்கை காணப்பட்டது. அதன்படி, “அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் யமுனா விரைவுச் சாலையில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன” என பதிவிடப்பட்டுள்ளது.

தவறான கூற்றுகளுடன் இந்த வீடியோ வைரலாவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும், இந்த வீடியோ பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தவறான தகவல்களுடன் வைரலானது. அந்த நேரத்தில், வீடியோ தொடர்பாக மதுராவின் டைனிக் ஜாக்ரன் தலையங்கப் பொறுப்பாளர் வினீத் மிஸ்ராவை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரிக்கப்பட்டது. அவர் வைரலான வீடியோ சமீபத்தியது அல்ல என்று கூறினார். உண்மை சோதனை அறிக்கையை இங்கே படிக்கலாம்.

இறுதியாக, தவறான உரிமைகோரல்களுடன் பழைய வீடியோவைப் பகிர்ந்த பயனரின் சுயவிவரம் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது பயனரின் கணக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்வது தெரியவந்தது. மேலும் அவர் பீகார் மாநிலம் மதுபானியில் வசிப்பவர் என தனது பக்கத்தில் விவரித்துள்ளார்.

முடிவு: 

விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில் பயங்கரமான விபத்தின் வைரல் வீடியோ சமீபத்தியது அல்ல எனவும், 2017-ம் ஆண்டிலிருந்து வந்தது எனவும் கண்டறியப்பட்டது. விபத்தின் பல ஆண்டுகள் பழமையான வீடியோ தற்போது சமீபத்தியது என தவறான உரிமைகோரல்களுடன் பகிரப்பட்டு வருகிறது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Vishvas News’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.