முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

சென்னை ஓபன் தொடரில் விளையாடும் கனடா வீராங்கனையின் இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பம்

சென்னை ஓபன் தொடரில் விளையாடும் கனடா நாட்டு வீராங்கனையின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சர்ச்சையாகி உள்ளது. அதை பற்றி பார்ப்போம்.

சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் ;

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையில் முதல் முறையாக சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ள பிரதான போட்டிகள், வரும் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் கிட்டத்தட்ட 20 மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 மேற்பட்ட வீராங்கனைகள் பங்கு பெற்றுள்ளதால், அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கவனிப்புகளானது தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்க நிர்வாகிகள் மூலம், எந்த குறையும் இல்லாத வண்ணம் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

சமீபத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தி முடித்த தமிழ்நாடு அரசிற்கு, சென்னை ஓபன் தொடரில் பாதுகாப்பு மற்றும் போட்டியாளர்களுக்கு உண்டான ஏற்பாடுகள் குறித்த அச்சம் இல்லை எனினும், பங்கேற்பாளர்களின் சுகாதாரம் குறித்த கேள்விகள் அவ்வப்போது வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை போலவே கனகச்சிதமாக இந்த டென்னிஸ் போட்டிகளையும் நடத்தி முடிக்க, அனைத்து ஏற்பாடுகளும் உயர்தர வசதிகளுடன் போட்டியாளர்களுக்கு, தமிழ்நாடு அரசின் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கனடா வீராங்கனையின் இன்ஸ்டா பதிவு ;

ஆனால் நேற்றையதினம், மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றுள்ள போட்டியாளரான, கனடாவை சேர்ந்த ஜீனி பவுச்சர்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் பயன்படுத்தும் வெள்ளை துண்டின் மீது, பூச்சி இருப்பது போன்றும், அது பார்ப்பதற்கு வண்டு போலவும், அதே சமையம் மூட்டை பூச்சி போலவும் காட்சியளித்த நிலையில், “Good luck in India?” என கேப்சன் போட்டு கேள்வி எழுப்பியிருந்தார் கனடா வீராங்கனை.

சர்ச்சையை ஏற்படுத்திய பதிவு ;

இந்த குழப்பமான புகைப்படத்தால் அவருக்கு கொடுக்கப்பட்ட துண்டில் இது கவனிக்கப்படாமல் கொடுக்கப்பட்டதா?, இல்லை அவர் அதனை அணுகும் விதம் புதிதாக உள்ளதா? அல்லது அவர் என்ன தான் சொல்ல வருகிறார் என குழப்பம் நீடித்த நிலையில், சமூக வலைதளங்களில் பார்த்த அனைவரும் அவர் எதற்காக இவ்வாறு பதிவிட்டுள்ளார் என ஒருவருக்கொருவர் மௌனமாக கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

பொதுவாகவே சென்னை ஓபன் போட்டிகள் மாலை 5 மணிக்கு தொடங்கப்படுவதால், உயர்தர மின் விளக்குகள் (flood lights) வெளிச்சத்தில், வெட்ட வெளியில் போட்டிகள் நடத்தப்படுவதால், வெளிச்சத்திற்கு பூச்சிகள் வருவதும், இதுபோன்ற சர்வதேச போட்டிகளில் ஆடுகளத்தில் வண்டுகள் அல்லது பூச்சிகள் வருவது சகஜமான ஒன்று. ஆனால் அவர் சொல்ல வருவது என்ன என்பதே அறியாத நிலையில், இதுகுறித்து அவரது தரப்பில் விசாரித்த போது மிகவும் சாதாரணமான ஒரு விளக்கத்தை அவர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

விளக்கம் அளித்த கனடா வீராங்கனை ;

அதாவது, அந்த புகைப்படத்தில் இருப்பது பெண் வண்டு எனவும், பெண் வண்டுகளை பார்ப்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக கருதுவதாகவும், எனவே தான் அந்த புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு இந்தியாவில் அதிர்ஷ்டம் வாய்த்துள்ளதோ? என கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்துள்ளாராம் ஜீனி பவுச்சர்டு.

கேட்பதற்கு கியூட் ஆக இருந்தாலும், இந்த சம்பவம் அவரது சுகாதாரத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்ற கேள்வியை எழுப்பி சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கான காரணம், அது வண்டா அல்லது மூட்டை பூச்சியா என்பது தான். எது எப்படியோ, வண்டாக இருந்தாலும் மூட்டை பூச்சியாக இருந்தாலும் விஷயம் தெரியுற வரை தோன்றுவதெல்லாம் காரணமாக கிளப்புவது நெட்டிசன்களிடம் இருந்து மாறா வடுவாகவே பார்க்கப்படுகிறது.

-நாகராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தும் கோரிக்கைகள் என்னென்ன?

குண்டும் குழியுமான சாலைகளால் பொதுமக்கள் அவதி – நியூஸ்7 தமிழ் கள ஆய்வு

Web Editor

ருத்ர தாண்டவம் ஆடிய தவான்; நழுவிய சதம்

G SaravanaKumar