புதுச்சேரி மனக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழந்துள்ள நிலையில், யானையின் உயிரிழப்பிற்கு வனத்துறை அதிகாரியே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குள விநாயகர் ஆலயமாகும், இந்தஆலயத்தில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது. இது கோயிலுக்கு வரும்பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளையும் வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் யானை லட்சுமி இன்று காலை நடை பயிற்சியின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனக்குள விநாயகர் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் லட்சுமி யானை உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யானைக்கு வனத்துறை அதிகாரி உரிய நடை பயிற்சி மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யாததன் காரணமாகவே உயிரிழந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும், வெளி மாநில மருத்துவர்களைக் கொண்டு லட்சுமி யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.







