ரஜினி கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா? கே.எஸ்.அழகிரி

ரஜினி கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டுமென கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர்…

ரஜினி கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா என்பதை அவர்தான் சொல்ல வேண்டுமென கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

75வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் நடைப்பயணமாக நான்கு முனை சந்திப்பு வரை சென்றனர்.

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் என்றும் செயல்பட்டதில்லை. கடந்த 5,000 ஆண்டுகளாக நடைபெற்ற தீண்டாமையை 100 ஆண்டுகளில் காங்கிரஸ் மாற்றியுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சனாதனத்தை திணிக்க பார்க்கிறார்” என குற்றம்சாட்டினார்.ஆளுநர் குறித்த கேள்விக்கு பதிலளித்த பேசிய அவர், “ஆளுநரின் அனைத்து கருத்துக்களையும் நாங்கள் எதிர்ப்பதில்லை. ஒரு சில கருத்துகளை மட்டுமே எதிர்க்கிறோம். சமீபத்தில் ஆளுநரை சந்தித்த ரஜினி அவரிடம் அரசியல் பேசியதாக கூறினார். ஆனால் என்ன பேசினோம் எனக் கூறாமல் தவிர்க்கிறார். இந்த விவகாரத்தில் கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா என்பதை ரஜினிதான் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும் நீட் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் காங்கிரசை பொறுத்தவரை நீட் வேண்டாம் என்று தான் கூறுகிறோம். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் சிபிஎஸ்பி பாடத்திட்டம் கொண்டு வந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு நீட் தேர்வு நடத்தினால் நாங்கள் ஏற்போம் என்றும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.