ரஜினிகாந்தின் அடுத்த பட இயக்குனர் இவரா?

ரஜினிகாந்த் தற்போதும் மற்றொரு இளைய தலைமுறை இயக்குநரோடு கைகோர்க்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.  சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு…

ரஜினிகாந்த் தற்போதும் மற்றொரு இளைய தலைமுறை இயக்குநரோடு கைகோர்க்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சூப்பட் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மிகப்பெரிய ஜெயில் செட் போடப்பட்டு அதில் நடைபெற்று வருகிறது.’ஜெயிலர்’ படம் முடியும் முன்னரே ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த பேச்சு சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது. சமீப வருடங்களாக இளம் இயக்குனர்களிடம் இணைந்து பயணிக்க விரும்பும் ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர் சிவகார்த்திகேயன் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற டான் திரைப்படத்தின் இயக்குனர். மேலும் இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இதற்கு முன்பு இதேபோல் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி ரஜினியை வைத்து படம் இயக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் நெல்சனுடன் இணைகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்ததால் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதேபோல் தற்போதும் மற்றொரு இளைய தலைமுறை இயக்குநரோடு ரஜினிகாந்த் கைகோர்க்கவுள்ளார் எனத் தகவல்கள் பரவிவருகிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.