என்னது பாகுபலி Copycat’ஆ ??

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2015 மற்றும் 2017’ல் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படம் ஒரு திருட்டுக்கதைனு சொன்னா ஏத்துக்குவீங்களா..? பாகுபலி திரைப்படம் வெளியானது முதல் – இது Lord…

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் 2015 மற்றும் 2017’ல் இரண்டு பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி திரைப்படம் ஒரு திருட்டுக்கதைனு சொன்னா ஏத்துக்குவீங்களா..?

பாகுபலி திரைப்படம் வெளியானது முதல் – இது Lord of the Rings, 300 பருத்திவீரர்கள் போன்ற Hollywood திரைப்படங்களில் இருந்து சுட்ட காட்சிகள் என நெட்டிசன்கள் விமர்சித்த வேளையில், சிலர் இப்படத்தின் கதையே திருட்டுக்கதை என்று குற்றம் சாட்டினர். ஆமாம் பாகுபலி கதையும், நாம் அனைவரும் சிறிய வயதில் கண்டு ரசித்த “THE LION KING” திரைப்படமும் ஒன்று தான்….. வாங்க பார்க்கலாம்……

மகிழ்மதியின் ராஜா’வான அமரேந்திர பாகுபலியை சூழ்ச்சி செய்து பல்வாள்தேவன் கொள்வார். அதன் பிறகு மகேந்திர பாகுபலி, அவந்திகாவை பின்தொடர்ந்து கதைக்குள் வந்து ராஜ்ஜியத்தை மீட்டெடுப்பார். அதுவரை சங்கா மற்றும் தொரை அவரை வளர்ப்பார்கள். அதேபோன்றுதான் LION KING’கிழும் mufasa’வை Scar சூழ்ச்சி செய்து கொன்று அரசன் ஆவார். அதன்பின் சிம்பா “நாலா” உதவியோடு கதைக்குள் வந்து தன் பெரியப்பா Scar’ஐ பழிவாங்கி ராஜியத்தை மீட்டெடுப்பார். அதுவரை அவரை Timon & Pumba வளர்ப்பார்கள்.

இந்த இரண்டு கதையிலும் – கதை நாயகனான Mufasa மற்றும் அமரேந்திர பாகுபலியும், வில்லனான Scar மற்றும் பல்வாள்தேவனும் அண்ணன் தம்பி தான். அதேபோன்றே வில்லனான இருவர் முகத்திலும் ஓர் தழும்பு இருக்கும். அப்பா மகனும் ஒரே உருவத்தோற்றத்தில் இருப்பார்கள். இந்த இரண்டு கதையிலும் Hero’க்கள் தன் ராஜியத்துக்கு திரும்பி செல்ல காரணம் Heroine தான். அப்பா Heroவின் இறப்புக்கு காரணம் சகோதரன் தான்.

Lion King திரைப்படத்தில் Mufasa சிம்பாவை அந்த Dark’ஆன மையான பூமிக்கு போகக்கூடாது என்று எச்சரிப்பார் ஆனால் சிம்பா அதை மீறி செல்வது போன்று காட்சி இருக்கும். அதே காட்சியை பாகுபலி திரைப்படத்தில் மஹேந்திர பாகுபலியின் வளர்ப்பு தாயான சங்கா சிவுவை மலை ஏறக்கூடாது அங்கு பேய் பூதம் இருக்கும்னு எச்சரிப்பார் ஆனால் சிவு அதை மீறி செல்வது போன்று நம்ம தெலுங்கு இயக்குனர் மாற்றி எடுத்திருப்பார்.

இந்த இரண்டு திரைப்படத்திலும் Hero மற்றும் வில்லன் கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை எளிதாக ஒப்பிட்டு பார்க்க முடியும். பாகுபலி எதை செய்தாலும் யோசித்து தெளிவுடன் செய்வார், அதை குறிக்கும் விதமாக படத்தில் ஒரு காட்சி இருக்கும் – போருக்கு முன்பு காளி தேவிக்கு பல்வாள்தேவன் மிருகபலி கொடுப்பான் ஆனால் பாகுபலி அதை தவறு என சுட்டிக்காட்டி தன் கையை அறுத்து இரத்தத்தை காணிக்கையாய் கொடுப்பார்.

Lion King’ல் Mufasa திட்டமிட்ட படி தான் வேட்டையாடுவார் ஆனால் Scar தோண்றும்போதெல்லாம் வேட்டையாடி அந்த இடத்தை நாசம் செய்வார்.

Lion King’ன் Hyena கூட்டமும் பாகுபலியின் காலகேயர்கள் கூட்டமும் ஒன்று தான் – இவை இரண்டும் எந்த நாட்டை கடந்து சென்றாலும் அந்த நாடே அழிந்ததாக குறிப்பிடுவார்கள். Mufasa இறப்புக்கு பிறகு சிம்பாவின் அம்மா சரபி Scar கிட்ட அடிமையா இருப்பாங்க அதேமாதிரி பாகுபலி இறந்த பிறகு தேவசேனாவை பல்வாள்தேவன் அடிமையாக வைத்திருப்பான். இந்த இரண்டு கதையிலும் வில்லன்களுக்கு மகாராணி மீது ஓர் மோகம் தான். அப்புறம் என்ன..?? Climax’ல நம்ம ரெண்டு குட்டி ஹீரோவும் அவங்க பெரியப்பா கூட சண்ட போட்டு அவங்க ராஜ்ஜியத்த மீட்டெடுப்பாங்க.

என்னம்மா Copy அடிச்சிருக்காரு…. இதுல கதையும் திருட்டு தான் அதில் வரும் காட்சிகளும் திருட்டு தான். இதை கேட்டா “Inspiration”னு சொல்வாங்க., எது என்னவோ படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடஞ்சிருச்சு. Copy அடிச்சாலும் அதை பிரம்மாண்டமா எடுத்ததுக்கு ஒரு Hatsoff சொல்லியே ஆகனும்.

இருந்தாலும் இந்த படத்துக்கு கிடைத்த வெற்றியில் பாதி கூட அன்றைய technology வைத்து இயக்கிய “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படத்துக்கு கிடைக்கலேயேனு வருத்தமாதான் இருக்கு.

  • துர்கா பிரவீன் குமார், நியூஸ் 7 தமிழ்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.