அயர்ன் மேன் மென்று துப்பிய சூயிங்கம் ரூ.45 லட்சத்திற்கு ஏலம்; இணையத்தில் சலசலப்பு!

அயர்ன் மேனாக நடித்து பிரபலமான ராபர்ட் டவுனி ஜூனியர் மென்று துப்பிய சூயிங்கம் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.  சூயிங்கம் வாங்குவதற்கு 45 லட்சம் ரூபாய் கொடுக்க தயாரா? நாங்கள் கேலி செய்கிறோம்…

அயர்ன் மேனாக நடித்து பிரபலமான ராபர்ட் டவுனி ஜூனியர் மென்று துப்பிய சூயிங்கம் 45 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 

சூயிங்கம் வாங்குவதற்கு 45 லட்சம் ரூபாய் கொடுக்க தயாரா? நாங்கள் கேலி செய்கிறோம் என்று நீங்கள் நினைத்தால், ஆன்லைன் விடப்பட்ட ஒரு ஏலம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிரோம். eBayல் சூயிங் கம் துண்டு ஒன்று ஏலத்தில் விடப்பட்டது, அதன் விலை 45 லட்சம் ரூபாய்.

கடந்த மாதம் நடைபெற்ற ஜான் ஃபேவ்ரூவின் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் ஸ்டார் விழாவில் அயர்ன் மேன் ராபர்ட் டவுனி ஜூனியர் தான் மெல்லும் பசையை எடுத்து, அதை ஃபவ்ரூவின் நட்சத்திரத்தின் மீது நகைச்சுவையாக ஒட்டினார். இதை ஈபே பயனர் ஒருவர் எடுத்து விற்பனைக்கு வைக்க முடிவு செய்தார்.

இதன் விளைவாக சூயிங்கம் 45 லட்சம் ரூபாய்க்கு ரசிகர் ஒருவரால் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தால் இணையம் அதிர்ச்சியடைந்தது. ட்விட்டரின் பெரும் பகுதியினர், சூயிங்கத்திற்கு இவ்வளவு பணம் செலவழிக்கும் அளவுக்கு மக்கள் எப்படி பைத்தியமாக இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தனர். இருப்பினும், ஏலத்தில் வெற்றி பெறுபவர் அயர்ன் மேன் நடிகரின் டிஎன்ஏவை வைத்திருக்க முடியும் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.

https://twitter.com/TeamDowney1965/status/1641076497787023362?s=20

https://twitter.com/bwhytecomedy/status/1641062639752167424?s=20

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.