கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மூன்றாவது அலை ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கவுள்ளனர். மாவட்ட அளவில் கொரோனா பரவலின் நிலை மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் பற்றி ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும், மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதை தடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்