19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நியூசண்டிகாரில் நேற்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான டாஸை வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ராஜஸ்தான் கள்மிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யவன்ஷி வழக்கம்போல அதிரடிகாட்டினார். இறுதியில் 19.2 ஓவர்களில் இலக்கை எட்டி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் பஞ்சாப் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.







