#IPL2026 | ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை!

அசாம் மாநிலம் கவுகாத்தியில் ராஜஸ்தான் – பெங்களூரு அணிகள் இன்று மோதுகிறது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

ராஜஸ்தான் அணி முதலாவது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், அடுத்த ஆட்டங்களில் 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 27 ரன் வித்தியாசத்தில் மும்பையையும் அடுத்தடுத்து வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரு அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை அதட்டியது. அடுத்த ஆட்டத்தில் 43 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு 17 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 14 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.