19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 43வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – டெல்லி அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
ஜெய்ஸ்வால் (6), சூர்யவன்ஷி (4)ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் பெரேராவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லிக்கு தொடக்கமே அற்புதமாக அமைந்தது. இறுதியில் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், பர்கர் மற்றும் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் எடுத்தனர்..







