ஐபிஎல் டிக்கெட் விற்பனை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நள்ளிரவு முதல் காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையில் வரும் 12ம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். 16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம்…

சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இடையில் வரும் 12ம் தேதி நடைபெறவிருக்கும் ஐபிஎல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க நள்ளிரவு முதல் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

16வது ஐபில் போட்டிகள் கடந்த மாதம் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வரும் 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9 மணி முதல் ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனை தொடங்கவுள்ளது. இதையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக ரசிகர்கள் நள்ளிரவு முதல் நீண்ட நேரமாக காத்து கொண்டுள்ளனர்.

கடந்த 3ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அபார வெற்றி பெற்றது குறிப்பிட்டத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.