Mi vs CSK அணிகளுக்கிடையேயான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

Mi vs CSK அணிகளுக்கிடையேயான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த 31ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இன்று இரண்டு லீக்…

Mi vs CSK அணிகளுக்கிடையேயான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கடந்த 31ம் தேதி கோலகலமாக தொடங்கியது. இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 12-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், மும்பை இந்தியன்சும் கோதாவில் குதிக்கின்றன.

தனது தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோற்ற சென்னை அணி அடுத்த போட்டியில் லக்னோவை 12 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் சென்னை பவுலர்கள் வைடு, நோ-பால் தாறுமாறாக வீசியதால் கோபமடைந்த கேப்டன் டோனி கடுமையாக கண்டித்தார்.

இரண்டு முன்னாள் சாம்பியன்களாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் நிலையில் இதில் யார் வெற்றி பெறுவார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில், இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். போட்டியில் முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். சீரான் தொடக்கத்தில் இருந்தது மும்பை அணி. மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசினார் இஷான் கிஷான்.

அதை தொடர்ந்து, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் மைதானத்திலிருந்து வெளியேறினார். பின்னர் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

https://twitter.com/CricCrazyJohns/status/1644723761231568896?s=20

அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன், 32 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார். மேலும், இஷான் கிஷன் 32 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், கேமரூன் கிரீன் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது.

பொறுப்புடன் விளையாடி வந்த திலக் வர்மா, 22 ரன்களை சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்ததால் 15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்துள்ளது. அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை சேர்த்தது.

 

இதனால், சென்னைக்கு 158 ரன்கள் இலக்கை எட்ட களமிறங்கியது சென்னையணி. போட்டியின் நான்காவது ஓவரை எதிர்கொண்ட ரகானே, ஒரு சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 23 ரன்களை அடித்து அசத்தினார்.

வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் ரகானே.இதனால் 4.3 ஓவர் முடிவில் 50 ரன்களை கடந்தது சென்னை.  அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ரகானே 61 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து 10.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை குவித்தது.

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே 28 ரன்களை எடுத்து, கார்த்திகேயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் நிதானமாக விளையாடிய அம்பத்தி ராயுடு மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அணியி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். இதனால், மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.