முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் விளையாட்டு

2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 தொடர்; சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி-ரசிகர்கள் உற்சாகம்

2023 ஆண்டுக்கான  ஐபிஎல்  டி20 போட்டி தொடருக்கான பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் டி20 தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக பார்க்கப்படுகிறது. அதன் படி 2023ம் ஆண்டிற்கான ஐபிஎல் டி20 தொடர் மார்ச் மாதம் 31ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்குகிறது.  இந்த முதல் போட்டியில் நடப்பு சாம்பியனாக இருக்கும் குஜராத் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர் கொள்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2023 ஆண்டிற்கான ஐபிஎல் டி20  தொடரில் மொத்தம்  70 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இதன்  இறுதிபோட்டி மே 21-ம் தேதி நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை கருத்தில் கொண்டு, வீரர்கள் போதிய ஓய்வு பெற்று தங்களை தயார்படுத்திக்கொள்ளும் விதமாக மே மாதம் மூன்றாவது வாரத்திலேயே ஐபிஎல் போட்டிகள் நிறைவடைகின்றன.

இதனையும் படியுங்கள்: ’பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை’ – வருமான வரித்துறை விளக்கம்

இந்த ஆண்டிற்கான  ஐபிஎல் போட்டிகள்  சொந்த மைதானத்தில் 7 போட்டிகளும், பிற மைதானங்களில் 7 போட்டிகளையும் அணியினர் விளையாடுவர்.  அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுஹாத்தி, தர்மசாலா உள்ளிட்ட 12 மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன.

ஐபிஎல் கிரிக்கெட் அணியில் சென்னைக்கு அடுத்த முக்கிய அணியாக கருதப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணியுடன் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஏப்ரல் 2ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும்.

குரூப் 1ல்  அணியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன

குரூப் 2ல்  சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாட களத்திற்கு வருவதால் தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

EZHILARASAN D

உடைந்த கண்ணாடியா ஓபிஎஸ் – இபிஎஸ் உறவு? மனங்கள் ஏன் இணையவில்லை?

Arivazhagan Chinnasamy

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

G SaravanaKumar