தூக்கி எறியப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டின் கவர்களில் இருந்து கண்ணாடிகளை தயாரித்து ஆஷாயா நிறுவனம் அசத்தியுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்கள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்வதற்கான வழிகளை கண்டறிய முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் சிப்ஸ் பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்து கருப்பு கண்ணாடிகளை (Sunglasses) ஆஷாயா என்ற நிறுவனம் தயாரித்து உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சிப்ஸ் பாக்கெட்டுகளில் இருந்து கருப்பு கண்ணாடிகளை தயாரித்தது குறித்து வீடியோ ஒன்றை ஆஷாயா நிறுவனத்தின் நிறுவனர், அனிஷ் மல்பானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ஏக்நாத் ஷிண்டேவுக்கு ‘சிவ சேனா’ – அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்
அந்தப் பதிவில், “சிப்ஸ் பாக்கெட் மட்டுமல்ல, மறுசுழற்சி செய்யமுடியாத சாக்லேட் கவர்கள், பால் கவர்கள் போன்ற பிளாஸ்டிக் கவர்களையும் நாங்கள் மறுசுழற்சி செய்கிறோம். எப்படி மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்த ஆய்வை கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டோம். அதன்பிறகு வழிமுறையை கண்டறிந்து தற்போது கண்ணாடியை உருவாக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.