’பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை’ – வருமான வரித்துறை விளக்கம்

பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனத்தின் புதுடெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். கடந்த…

பிபிசி சில கணக்குகளில் முறையாக வரி செலுத்தவில்லை என வருமான வரித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனத்தின் புதுடெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். கடந்த 14-ம் தேதி இந்த சோதனையை வருமான வரித்துறையினர் சோதனையை தொடங்கினர்.  சர்வதேச வரி முறைகேடு மற்றும் துணை நிறுவனங்களுக்குள் நிதி மாற்றத்தில் நடந்துள்ள புகார்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வரி விதிப்பு மற்றும் நிதி பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை சேகரிக்க ஊழியர்களின் செல்போன்கள், லேப்டாப்கள், அலுவலக பயன்பாட்டில் உள்ள மின்னணு சாதனங்களில் சோதனை நடந்து வந்தது. மூன்று நாட்களாக நடந்த வந்த சோதனை குறித்து வருமான வரித்துறை  தற்போது விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ’அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கி வைத்துள்ளது’ – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பிபிசி பெயரை குறிப்பிடாமல் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பிபிசி வருவாய் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரத்துடன் ஒத்துபோகவில்லை. டிவி, ரேடியோ, டிஜிட்டல் என பல்வேறு மொழிகளில் அளிக்கப்படும் சேவையில் வருவாய் கணக்கிடுவதில் விதிமீறல் உள்ளது. இந்தியாவில் இருந்து வெளியே அனுப்பப்பட்டுள்ள தொகைகளுக்கு கணக்கு காட்டவில்லை.சில டிஜிட்டல் ஆவணங்கள், ஊழியர்களின் வாக்குமூலம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.