ஐபிஎல் மெகா ஏலம் – டெல்லியின் கில்லியாகிறார் Yorker King நட்டு!

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தமிழக வீரர் நட்ராஜன் ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2025 ஐபிஎல் மகா ஏலம், சவுதி…

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தமிழக வீரர் நட்ராஜன் ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 2025 ஐபிஎல் மகா ஏலம், சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நாளையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 120 கோடி ஏலத்தொகை மற்றும் 6 ஆர்டிஎம் கார்டு ஆப்சன்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியை கட்டமைக்கும் முயற்சியில் வீரர்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனர்.


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஏலத்தில் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ரிஷப் பந்த் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருந்த தமிழ்நாட்டு வீரர் நட்ராஜனை டெல்லி அணி ஏலத்திற்கு எடுத்துள்ளது. ரூ.10.75 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது . கடந்த சீசன் வரை ரூ.4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நடராஜன் விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.