ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வாஷிங்டர் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
இதனை தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூரு அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. எளிதான இலக்கு என்ற போதிலும் அதிரடியான ஆடிய பெங்களூரு அணி 18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் விளாசியது.
அதிரடியாக ஆடிய விராட் கோலி 75 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது பெங்களூரு அணியின் 2வது ஐபிஎல் கோப்பையாகும்.




