ஐ.பி.எல். திருவிழா இன்று தொடக்கம்; இந்த முறை கோப்பையை வெல்லப்போவது யார் ?

பத்து அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா, இன்று கோலாகலமாக தொடங்குகிறது. ஐபிஎல்2023 துவக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா மற்றும் பாலிவுட் பிரபல பாடகர் ஆர்ஜித்…

பத்து அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா, இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

ஐபிஎல்2023 துவக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா பாட்டியா மற்றும் பாலிவுட் பிரபல பாடகர் ஆர்ஜித் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனர்.

மேலும், பாலிவுட் பிரபலங்கள் டைகர் ஷெராப் மற்றும் கத்ரீனா கைப் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  துவக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேந்திர சிங் தோனி தலைமையிலும் களமிறங்க உள்ளன.

இன்று நடைபெறவுள்ள முதல் போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கப்படுகிறது. இந்த முறை ஐபிஎல் தொடரில் இருந்து இம்பாக்ட் பிளேயேர் விதி மற்றும் டாஸ் வென்ற பின்னர் இரு அணிகளும் தங்களது பிளேயிங் 11ஐ அறிவிக்கலாம் உள்ளிட்ட விதி மாற்றங்களுடன் தொடங்கப்பட உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி 5-வது முறையாகவும், மும்பை இந்தியன்ஸ் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பஞ்சாப், டெல்லி, பெங்களூர் அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன. ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.