19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் அபுதாபியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏலத்தை மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் நடத்துகிறார். இந்த நிலையில் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்க ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவியது. இறுதியில் கொலகத்தா அணி கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரரான அகேல் ஹோசினை அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது. இந்த ஏலத்தில் சென்னை அணி வாங்கிய முதல் வீரர் இவர் என்பது குறிப்பிடததக்கது.
அதேபோல் முன்னாள் சென்னை அணி வீரரான மதீஷா பதிரனாவை வாங்க டெல்லி மற்றும் லக்னோ அணிகள் மல்லுக்கட்டின. இறுதி களத்தில் குதித்த கொல்கத்தா அணி பதிரனாவை ரூ. 18 கோடிக்கு வங்கியது. தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா, டெவன் கான்வே, விஜய் சங்கர், தீபக் ஹூடா ஆகிய வீரர்கள் முதல் நாள் ஏலத்தில் எந்த அணியும் வாங்க வில்லை.







