சிஎஸ்கேவின் அடுத்த போட்டிக்கான டிக்கெட் விலை “திடீர்” குறைப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.     கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும்  இத்தொடரை…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்தப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.  

 

கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில் அனல் பறப்பதால் ஒவ்வொரு வருடமும்  இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.  இதனை பூர்த்தி செய்யும் விதமாக,  ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இன்று (மார்ச்.22) சென்னையில் தொடங்க உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,  பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.  இதனிடையே நேற்று மாலை (மார்ச்.21) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகினார்.  அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மார்ச் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.  இந்தப் போட்டிக்கான டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.   முதல் போட்டியில் டிக்கெட்டின் விலை ரூ,1700 லிருந்து ரூ.7500 ஆக இருந்த நிலையில், இந்த போட்டிக்கான அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.6000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.