IPL 2024 : புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்!

2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்துள்ளது. 17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல்…

2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்துள்ளது.

17ஆவது ஐபிஎல் சீசன் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியும் மோதுகின்றனஇந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது

போட்டி தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். இதையடுத்து, ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே தொடங்கிவிட்ட நிலையில், மற்ற அணிகள் தங்களை பயிற்சிப் படுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம் | வரலாறு, போராட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள்!

இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான புதிய சீருடையை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டு பதிவிட்டிருப்பதாவது: புதிய தோற்றம். ஐபிஎல் தொடரில் தீயாக விளையாட அனைவரும் தயாராக உள்ளனர் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.