ஐபிஎல் 2024: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி – மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்!

ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது. 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம்…

ஐபிஎல் 2024 தொடரின் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு செய்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியுள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.  இதில்,  சென்னை, பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா,  ஐதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத்,  லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில்,  33வது லீக் போட்டி பஞ்சாபில் உள்ள மைதானத்தில் இன்று  இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது.  இன்றைய போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ்  அணிகளும் மோதுகின்றன.

பஞ்சாப் அணி 6 போட்டிகளில் விளையாடி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் 6 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பஞ்சாபுக்கு அடுத்த இடத்தில் உள்ளன.

இன்று நடைபெறும் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் ஷர்மாவிற்கு 250வது போட்டியாகும். இதன் மூலம் ரோஹித் ஷர்மா ஒரே அணிக்காக 250 போட்டிகள் விளையாடிய ஒரே மும்பை வீரர் என்கிற சாதனை படைத்துள்ளார்.

இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாட டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.