ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. 17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம்…

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.  இதில்,  சென்னை, பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா,  ஐதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத்,  லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதையும் படியுங்கள் : ஜாஸ் பட்லர் அதிரடி சதம்! 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி!

இந்நிலையில்,  32வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் நடைபெற உள்ளது.  இன்றைய போட்டியில்,  குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் மோதுகின்றன.

இதையடுத்து,  குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில்,  3 போட்டிகளில் தோல்வி மற்றும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றது.  குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது.  அதேபோல,  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இதுவரை 5 போட்டிகளை விளையாடி,  அதில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.