ஐபிஎல் 2023; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 197 ரன்கள் குவிப்பு

ஐபில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப்…

ஐபில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் தொடரின் 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரகளாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர்.

பிரப்சிம்ரன் சிங்அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். 60 ரன்கள் எடுத்த நிலையில் பிரப்சிம்ரன் சிங் அவுட் ஆனார். பிரப்சிம்ரன் – ஷிகர் இணை முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பானுகா ராஜபக்சே களம் இறங்கினார். ஷிகர் தவான் அடித்த பந்து அவரது கையில் பலமாக தாக்கியதன் காரணமாக அவர் வெளியேறினார்.

இதையடுத்து ஜித்தேஷ் சர்மா தவானுடன் ஜோடி சேர்ந்தார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தவான் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் தவான் 86 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 60 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.