நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சிலம்பரசனை நியமித்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரவணன் பணியாற்றி வந்தார். அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி ஆக பணியாற்றிய பல்வீர்சிங் பல்வேறு விசாரணை கைதிகளிடம் பற்களை புடுங்கியதாக எழுந்தது.
இதையடுத்து நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அம்பை சரக்கத்திற்கு புதிய சரக காவல்துறை கண்காணிப்பாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார்.
இந்த புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சரவணன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நெல்லை மாவட்ட காவல் கூடுதல் எஸ்பியாக அறிவிக்கப்பட்டார். தற்பொழுது நெல்லை மாவட்ட எஸ்பியாக சிலம்பரசன் நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.








