பந்து வீச்சில் அசத்திய மும்பை; ராஜஸ்தான் 90 ரன்களில் சுருண்டது

மும்பை அணிக்கு 91 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. ஐபிஎல்லில் வாழ்வா சாவா போராட்டத்தில் இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி…

மும்பை அணிக்கு 91 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல்லில் வாழ்வா சாவா போராட்டத்தில் இன்று மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிகளின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 6வது இடத்திலும் மும்பை அணி 7வது இடத்திலும் உள்ளன.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணியின் எவின் லூயிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஜெய்ஸ்வால் 12 ரன்னிலும், லூயிஸ் 24 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களையும் சொற்ப ரன்களில் வெளியேற்றி மும்பை பந்து வீச்சாளர்கள் அசத்தினர்.

ராஜஸ்தான் அணியில் ஒருவர் கூட 25 ரன்களை தாண்டவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்திருந்தது. அணியில் அதிகபட்சமாக லூயிஸ் 24 ரன்கள் அடித்திருந்தார். மும்பை அணியை பொறுத்தவரை நாதன் கூல்டர்-நைல் 4 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.