முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் சிஎஸ்கே- டெல்லி நாளை மோதல்

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நாளை மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. நேற்று, ஒரே நேரத்தில் 2 போட்டிகள் நடந்தன. மும்பை- ஐதராபாத், டெல்லி – பெங்களூரு அணிகள் மோதின. இதில் முறையே மும்பை, பெங்களூரு அணிகள் வெற்றி பெற்றன. அந்த போட்டி களுடன் லீக் சுற்றுப் போடிகள் நிறைவு பெற்றன.

போட்டிகளின் முடிவில், முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மற்ற அணிகளான நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் வெளியேறின.

இந்நிலையில், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று போட்டி, நாளை நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. துபாயில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

திங்கட்கிழமை (11 ஆம் தேதி) சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில், புள்ளி பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்த பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறிவிடும். வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மோதும். இந்தப் போட்டி 13- ஆம் தேதி நடக்கிறது. இறுதிப்போட்டி 15-ஆம் தேதி துபாயில் நடக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

அரசு பாடநூல் கழகத் தலைவராக பொறுப்பேற்றார் திண்டுக்கல் லியோனி

Saravana Kumar

டெல்லி பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சைகள்

Halley karthi

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா

Ezhilarasan