iPhone 11 பயனர்களுக்கான ஒரு சூப்பர் அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஐபோன் 11 மாடலை பயன்படுத்துவர்களுக்கு Touchscreen சரிவர வேலை செய்யவில்லை என்ற புகார் பரவலாக எழுந்தது. இதனையடுத்து அந்த மாடல் ஐபோன்களில் இந்த பிரச்சனை உள்ளதை அந்நிறுவனமும் ஒப்புக் கொண்டது. அதனால் ஐபோன் 11 பயனர்களுக்கு இலவசமாக Display மாற்றி தரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நவம்பர் 2019 முதல் மே 2020 வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 11 மாடல்களுக்கு மட்டுமே இந்த இலவச சேவை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இணையதளப் பக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் ஐபோனின் சீரியல் நம்பரை கொடுத்தால் நீங்கள் இந்த இலவச சேவைக்கு தகுதியானவரா இல்லையா என தெரிந்து விடும்.
இந்த சேவைக்கு நீங்கள் தகுதியானவர் என தெரிந்தால், அருகில் உள்ள Apple Retail Store-ல் போனை கொடுத்து சரிசெய்து கொள்ளலாம். settings- General- About சென்று பார்த்தால் அதில் உங்கள் சீரியல் எண் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட இணையதள பக்கத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஐபோனில் உள்ள முக்கியமான தரவுகளை Backup எடுத்து வைத்துக் கொள்ளும்படியும் ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.







