சொத்து வரி சீராய்வு-பொதுமக்களுக்கு புதிய உத்தரவு

சொத்து வரி சீராய்வு பணிகள் நடைபெற்று வருவதால், புதிய வரி விகிதம் நடைமுறைக்கு வரும் வரை பொதுமக்கள் ஏற்கனவே செலுத்தி வந்த வரியை செலுத்தும் படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரிகளை சீரமைக்கும்…

சொத்து வரி சீராய்வு பணிகள் நடைபெற்று வருவதால், புதிய வரி விகிதம் நடைமுறைக்கு வரும் வரை பொதுமக்கள் ஏற்கனவே செலுத்தி வந்த வரியை செலுத்தும் படி சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

சொத்து வரிகளை சீரமைக்கும் பணிகள் நிறைவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்பதால், அதுவரை, ஏற்கனவே செலுத்தி வந்த வரி தொகையை செலுத்தலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சீராய்வு குழு அளிக்கும் பரிந்துரை சென்னை மாநகராட்சி மாமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட பின்னர் தான் சொத்து வரி உயர்வு அமல்படுத்தப்படும் எனவும், அதன் பின்னர் மீத தொகையை செலுத்த வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டுக்கான முதல் அரையாண்டு வரியை வரும் 15-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை மாநகராட்சி, வரும் 15-ம் தேதிக்குள் வரியை செலுத்தினால் 5% ஊக்க தொகையை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.