’அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அகற்றப்படும்’

மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு, அரசு நிலங்களை பயன்படுத்தி, புதிய கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய…

மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர், கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு, அரசு நிலங்களை பயன்படுத்தி, புதிய கட்டடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தாம்பரம் எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் தொகுதி கடப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்துக்கும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம் ஆகிய இடங்களில் புதிய வருவாய் ஆய்வாளர் கட்டடங்களும் கட்டப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய வருவாய் & பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தாம்பரம் தொகுதி கடப்பேரி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு, இடம் தேர்வு செய்யப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கும் என்றும், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், மேடவாக்கம் ஆகிய இடங்களில் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாநிலம் முழுவதும் பழமையான கட்டடங்களில் செயல்பட்டு வரும் கோட்டாட்சியர், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அரசு அலுவலகங்களுக்கு கட்டடம் கட்ட அரசு நிலங்கள் பயன்படுத்தப்படும் என்றும், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை அகற்றப்பட்டு, அரசு அலுவலகங்களுக்கு கட்டடம் கட்டும் பணி தொடங்கும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.