அறிமுகமானது குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா

குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வார விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. அப்போது, குற்றவியல் நடைமுறை திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்…

குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வார விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்றத்தின் மக்களவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் கூடியது. அப்போது, குற்றவியல் நடைமுறை திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தாக்கல் செய்தார்.

பின்னர் பேசிய மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, 1920-ல் உருவாக்கப்பட்ட குற்றவியல் நடைமுறை மசோதா 102 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், ஏற்கனவே உள்ள குற்றவியல் நடைமுறை மசோதாவில் கைதிகளின் கைரேகைகள் மற்றும் கால்தடங்களை மட்டுமே சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

தற்போது, உலகம் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளதால் குற்றங்களும், அதன் போக்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதனால்தான் குற்றவியல் நடைமுறை மசோதாவில் திருத்தம் கொண்டுவந்துள்ளதாக குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்றனர்

குற்றவியல் நடைமுறை திருத்த மசோதாவில் வழக்கு விசாரணையை அதிகரிக்க உதவும் என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்களில் தண்டனை விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் குற்றவியல் நடைமுறை மசோதாவுக்கு ஆதரவாக 120 பேரும், எதிராக 58 பேரும் வாக்களித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.