சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் பதவி ஏற்றனர்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னை உயர்நீதிமன்ற புதிய கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம்…

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற புதிய கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா, சவுந்தர் ஆகியோரை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருந்தார். இதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருவரும் இன்று பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய நீதிபதிகளை அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்ச்சியில், கூடுதல் அட்வகேட் ஜெனரல், குற்றவியல் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்தி: ‘தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன்’ – மிரட்டும் காவலர்

புதிய நீதிபதிகள் நியமனத்தையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் தற்போது 14 இடங்கள் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.