வனத்தையே கட்டி ஆளும் புலிகள், அழிவின் விளிம்பில் இருப்பதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் இன்று உலக புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பார்க்கவே அச்சமூட்டும் உருவம், கேட்டதும் கிடுகிடுக்க செய்யும் கர்ஜனை என விலங்கினங்களில் தனித்த இடம் பிடித்தது புலி. ஆனால், உணவுச் சங்கிலியை பாதுகாப்பதில் புலிகளுக்கு மிக முக்கிய பங்குண்டு என்கின்றனர் ஆய்வாளர்கள். உலகில் சுமார் 80 சதவீத புலிகள் இருக்கும் இந்தியாவில், முதன் முதலில் புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது நீலகிரி அருகேயுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம்.
இன்றைய காலகட்டத்தில், மருந்து, இறைச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக உலகில் புலிகள் அதிகளவில் வேட்டையாடப்படுவதாகக் கூறுகிறார் நெஸ்ட் அமைப்பைச் சேர்ந்த சிவதாஸ்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையால் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறும் சிவதாஸ், அவற்றின் வாழிடப் பற்றாக்குறையை போக்க வன விரிவாக்கம் உடனடி தேவையாக உள்ளது எனவும் கூறுகிறார்.
On #InternationalTigerDay, greetings to wildlife lovers, especially those who are passionate about tiger conservation. Home to over 70% of the tiger population globally, we reiterate our commitment to ensuring safe habitats for our tigers and nurturing tiger-friendly eco-systems. pic.twitter.com/Fk3YZzxn07
— Narendra Modi (@narendramodi) July 29, 2021
நீலகிரி வனச்சூழல் பகுதியில் மேற்கொள்ளப்படும் வன உயிரின பாதுகாப்பு நடவடிக்கைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறும் விலங்கின ஆர்வலர்கள், உணவுச் சங்கிலியை பாதுகாக்கவும், பல்லுயிர் சூழலை பாதுகாக்கவும் புலிகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.
உலக புலிகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, புலிகள் பாதுகாப்பில் ஆர்வமுள்ள கானுயிர் ஆர்வலர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.










