பள்ளி மாணவியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டியதாக இளைஞர் கைது

சென்னை அருகே இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டியதாக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் கண்ணன் மற்றும் அசாரூதின்…

சென்னை அருகே இன்ஸ்டாகிராமில் பள்ளி மாணவியிடம் ஆபாச படம் கேட்டு மிரட்டியதாக இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு பள்ளி மாணவியிடம் இன்ஸ்டாகிராமில் கண்ணன் மற்றும் அசாரூதின் ஆகிய இரண்டு இளைஞர்கள் பழகிவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த மாணவியிடம் ஆபாச படங்களை அனுப்பக் கோரி கோரி இருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

 

இதையடுத்து மாணவியின் பெற்றோர் திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து கண்ணன் மற்றும் அசாருதினை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மேல சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்த கண்ணனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர் அசாருதினை தேடிவருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.