நாடு முழுவதும் கப்பல் துறைமுகங்கள் மற்றும் சர்வதேச விமான அலுவலகங்களில் கண்காணிப்பு பணியை சுங்கத்துறை மேற்கொண்டு வருகின்றன. மத்திய வருவாய் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இத்துறையின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்படும் பொருட்கள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை கண்கானிக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் உள்ள சுங்க அலுவலகத்தில் காலியாக உள்ள 10 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, குறிப்பிடப்பட்டுள்ள 10 இடங்களில் டிரேட்ஸ்மேன் (Tradesman) – 02, மாலுமி (Seaman) – 06, எந்திர எண்ணெய் பராமரிப்பாளர் (Greaser) – 02 ஆகும்.
கல்வித் தகுதியை பொருத்தவரை டிரேட்ஸ்மேன் (Tradesman) பணிக்கு மெக்கானிக்/ டீசல்/ ஃபிட்டர்/வெல்டர்/எலக்ட்ரிஷியன் உள்ளிட்ட ஏதேனும் ஒரு படப்பிரிவில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும். ஒராண்டு பணி அனுபவம் அவசியம். சீமேன் (seaman) பதவிக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியுடன் கடலில் செல்லும் இயந்திரக் கப்பலில் மூன்று வருட அனுபவம், பெற்று இருக்க வேண்டும்.
எண்ணெய் பராமரிப்பாளர் (Greaser) பணிக்கு குறைந்தட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் கடலில் இயங்கும் இயந்திரமயமாக்கப்பட்ட கப்பல்களில், முதன்மை மற்றும் துணை இயந்திரங்களைப் பராமரிப்பதில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் சம்பளம் விவரம் :
18-வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படும்.
டிரேட்ஸ்மேன் – ரூ19,900 – 63,200/-
சீமேன் – ரூ.18,000 – 56,900/-
எண்ணெய் பராமரிப்பாளர் – ரூ.18,000 – 56,900/-
ஆர்வமுள்ளவரக்ள் இந்த பணிக்கு https://chennaicustoms.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க 30.04.2026 கடைசி நாளாகும்.







